பைப்லைன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்

தம்மம்பட்டி, பிப்.25: தம்மம்பட்டி அருகே மூலப்புதூர் மற்றும் தகரபுதூர் ஊராட்சி தலைவராக சுசீலா கோவிந்தராஜ் ‘உள்ளார். மூலப்புதூரில் 27 ஆழ்துளை கிணறுகளும்,  தகரபுதுரில் 400 அடி மற்றும் 900 அடியில் 2 போர்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தகரபுதூர் ஊராட்சிக்கு 400 அடியில் உள்ள போர் மூலமாக 3 நாளைக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.  இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவரான சுசிலா கோவிந்தராஜ் தகரபுதூர் ஊராட்சியில் உள்ள 900 அடி போர்வெல்லில் இருந்து மூலபுதூருக்கு தண்ணீர் கொண்டு செல்ல பொக்லைன் மூலம் பைப் லைன் அமைக்கும் பணியை நேற்று துவங்கினார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தம்மம்பட்டி- கெங்கவல்லி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், மூலபுதூர் ஊராட்சியில் 27 போர்வெல்கள் உள்ள நிலையில், தகரபுதூரில் உள்ள போர்வெல்லில் இருந்து தண்ணீரை கொண்டு செல்ல ஊராட்சி மன்ற தலைவர் முயற்சிக்கிறார். தகரபுதூரில் 500 குடும்பங்கள் உள்ளதால் வறட்சி காலத்தில் குடிநீருக்கு திண்டாட வேண்டி வரும். எனவே, பைப்லைன் அமைக்கும் பணியை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர்.

Related Stories:

>