செம்மரக்கடத்தல் குறித்து செய்தி வெளியிட்ட நிருபர் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை: ஆந்திராவில் பயங்கரம்

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டாவை சேர்ந்தவர் ஜெகன்மோகன் ரெட்டி. பிரபல தெலுங்கு தின பத்திரிக்கை நிருபர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் வி.கோட்டாவில் மற்றொரு நிருபர் சுப்ரமணியத்துடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஜெகன் மோகன் ரெட்டியை கண்மூடித்தனமாக நடுரோட்டில் துரத்திச் சென்று வெட்டிக் கொலை செய்தனர்.

இதனை தடுக்க முயன்ற சுப்ரமணியத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இந்த கொலைக்கு முக்கிய காரணம் சில நாட்கள் முன்பு செம்மரக்கடத்தலில் உள்ளூரை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி எழுதிய கட்டுரையால் அதற்கு பழி வாங்கும் விதமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: