ஜெயலலிதா பிறந்தநாள் விழா

ஓமலூர், பிப்.25:ஓமலூர் நகர அதிமுக மற்றும் ஜெ. பேரவை சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அவரது உருவபடத்திற்கு ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். இதேபோல் ஓமலூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மேட்டூர் பிரிவு சாலை அருகில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல் தலைமையில், ஓமலூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், ஓமலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருமான ராஜேந்திரன் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் முன்னாள் எம்எல்ஏக்கள் பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமான், முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் கோவிந்தசாமி, சரவணன், ஜெ. பேரவை செயலாளர் தளபதி, மாவட்ட கவுன்சிலர் மணி, ஒன்றிய கவுன்சிலர் நதியா சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>