திருச்செங்கோடு அருகே வீடு புகுந்து நகை திருட்டு

திருச்செங்கோடு, பிப்.25: திருச்செங்கோடு அருகே ஒக்கிலிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(38). ரிக் வண்டி மேலாளரான இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டார். நேற்று காலை வீட்டிற்கு வந்த சதீஷ்குமாரின் நண்பர், பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலின்பேரில், சதீஷ்குமார் வீட்டுக்கு வந்து பார்த்த போது,  பீரோவில் வைத்திருந்த முக்கால் பவுன் நகை மாயமாகியிருப்பதை கண்டு திடுக்கிட்டார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செங்கோடு புறநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>