மாவட்டம் முழுவதும் 15 தாசில்தார் இடமாற்றம்

நாமக்கல், பிப்.25: சட்டமன்ற தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் சொந்த தொகுதியில் பணியாற்றும் தாசில்தார்கள் மற்றும் 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் தாசில்தார்கள் 15 பேர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் தாசில்தார் கதிர்வேல், கொல்லிமலை நிலவரி திட்டத்துக்கும், கலால் மேற்பார்வை அலுவலர் தமிழ்மணி, நாமக்கல்லுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ராசிபுரம் தாசில்தார் பாஸ்கரன், நாமக்கல் கலால் மேற்பார்வை அலுவலராகவும், கொல்லிமலை நிலவரி திட்ட தனி தாசில்தார் தமிழ்மணி, ராசிபுரம் சமூக பாதுகாப்பு திட்டத்துக்கும், அங்கு பணியாற்றி வந்த திருமுருகன், தேர்தல் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

தேர்தல் பிரிவில் கடந்த 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றி வந்த சுப்ரமணியன், கோட்ட கலால் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கோட்ட கலால் அலுவலர் சுகுமார், பரமத்திவேலூர் சமூக பாதுகாப்பு திட்டத்துக்கும், அங்கு பணியாற்றி வந்த தங்கராசு, திருச்செங்கோடு சமூக பாதுகாப்பு திட்டத்துக்கும், அங்கு பணியாற்றி வந்த குணசேகரன், திருச்செங்கோடு புறவழிச்சாலை நிலம் எடுப்பு திட்டத்துக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு புறவழிச்சாலை நிலம் எடுப்பு திட்ட தனி தாசில்தார் கண்ணன், திருச்செங்கோடு தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த பாஸ்கர், மோகனூருக்கும், மோகனூர் ராஜேஸ்கண்ணா, ராசிபுரம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குமாரபாளையம் நத்தம் நிலவரி திட்ட தனி தாசில்தார் செந்தில்குமார், நாமக்கல் புறவழிச்சாலை திட்ட நிலம் எடுப்பு பிரிவுக்கும், இங்கு பணியாற்றி வந்த சுரேஷ், சேந்தமங்கலம் தாசில்தாராகவும், சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி, குமாரபாளையம் நத்தம் நிலவரி திட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் மெகராஜ் பிறப்பித்துள்ளார்.

Related Stories:

>