39,947 அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு டேட்டா கார்டு அமைச்சர் தங்கமணி வழங்கினார்

குமாரபாளையம்,பிப்.25: குமாரபாளையத்தில் 39,947 அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 2 ஜிபி டேட்டா கார்டுகளை மின்துறை அமைச்சர் தங்கமணி வழங்கினார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான 2 ஜிபி டேட்டா கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று அரசு கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு டேட்டா கார்டுகளை வழங்கி பேசுகையில். ‘முதலமைச்சர் உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்தில் 39,947 மாணவ, மாணவிகளுக்கு தினம் 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கப்படுகிறது. நகராட்சி பகுதியில் இதுவரை 728 மகளிர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) 142 பேர்களுக்கு மானியத்திற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

நிகழ்ச்சியில் ஆர்டிஓ மணிராஜ், தாசில்தார் தங்கம், நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு, நகராட்சி பொறியாளர் சுகுமார், கூட்டுறவு வங்கி தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: