சுமை தூக்கும் தொழிலாளருக்கு நலஉதவிகள்

நாமக்கல்,  பிப்.25: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த தினம் நேற்று  நாமக்கல்லில் நகர அதிமுக சார்பில் 39 வார்டுகளிலும் கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் பாஸ்கர் எம்எல்ஏ, சந்தைப்பேட்டை  புதூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஆட்டோ டிரைவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் 100 பேருக்கு  நலஉதவிகளை வழங்கினார். இதன் பின்னர் நாமக்கல் குளக்கரை திடலில் ₹10 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள  பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்  மயில்சுந்தரம், கூட்டுறவு வங்கி தலைவர்கள் விஜய்பாபு, கண்ணன், ராஜா,  விஜயகுமார், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் பொரி சண்முகம், நகராட்சி பஸ்  ஸ்டாண்ட் கடை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் மாணிக்கம், முன்னாள்  கவுன்சிலர்கள் வெங்கடேசன், பழனிவேல், அதிமுக பிரமுகர்கள் குமரன், பொன்மணி  சுரேஷ், இளைஞரணி திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>