அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை, பிப்.25: தளி மின்வாரிய அலுவகம் முன் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தளி மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், மின் இணைப்பு வழங்காமல், விண்ணப்பித்துள்ள விவசாயிகளை அதிகாரிகள் அலைகழித்து வருகின்றனர். இதனை கண்டித்து மின் வாரிய அலுவகம் முன் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கணேஷ்ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சீராம்ரெட்டி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சின்னசாமி பேசினார். ஆர்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் செந்தில், மாநில செயலாளர் சின்னசாமி, டிராக்டர் உரிமையாளர் சங்க தலைவர் மகாராஜன், மாவட்ட செயலாளர் சென்னையநாயுடு, மாவட்ட பொருளாளர் சண்முகம், துணை செயலாளர் சந்திரசேகர், செம்புலிங்க கவுடா, ஒன்றிய நிர்வாகிகள் மாதேஷ், சங்கரப்பா, மல்லேஷ், ஆராத்தியா, ராஜகோபால், நரசிம்மாரெட்டி, ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய தலைவர் கணேஷ்ரெட்டி நன்றி கூறினார்.

Related Stories:

>