லாரி மோதி 2 முதியவர்கள் பலி

கிருஷ்ணகிரி, பிப்.25: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே குப்பச்சிபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்(81). இவர், குருபரப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார். இதேபோல், விருப்பசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த கங்கோஜிராவ்(81) என்பவரும் மருத்துவமனைக்கு வந்துள்ளார். இருவரும், தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, டெல்லியிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராமன், கங்கோஜி ராவ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதபமாக உயிரிழந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், குருபரப்பள்ளி போலீசார் விரைந்து சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். வயதான காலத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வந்த இடத்தில் விபத்தில் சிக்கி முதியவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>