பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ஊத்தங்கரை, பிப்.25: ஊத்தங்கரை பாம்பாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை, முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி நீர்த்தேக்கத்திலிருந்து பாசன வசதிக்காக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி நேற்று காலை தண்ணீரை திறந்து வைத்தார். இதன்மூலம் மூன்றம்பட்டி, கொண்டம்பட்டி, பாவக்கல், அத்திப்பாடி, நாய்க்கனூர், நடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 4000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன், ஒன்றிய கவுன்சிலர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்வர் பாஷா, மகேஷ்குமார், வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் கார்த்திக், சந்திரன், ஆசிரியர் மிட்டப்பள்ளி தேவேந்திரன், கொண்டம்பட்டி ஊராட்சி தலைவர் சத்தியவாணி ராஜா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>