செயற்கை இழை ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும்

திருப்பூர், பிப்.25:  இந்தியாவின் செயற்கை இழை ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி விரைவில் அதிகரிக்கும் என ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேல் தெரிவித்தார். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.) மற்றும் கொலம்பியாவுக்கான இந்திய தூதரகம் இடையே காணொலி மூலம், ஆடை மற்றும் ஜவுளி நிறுவனங்களில் இந்தியா-கொலம்பியா சினெர்ஜிஸ் என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் ஏ.இ.பி.சி. தலைவர் சக்திவேல் பேசியதாவது: கொலம்பியா வர்த்தகர்களுக்கான மெய்நிகர் தளத்தில் ஏ.இ.பி.சி. ஒரு பாலமாக செயல்படுகிறது. இதில் இந்தியாவிலிருந்து 320 ஏற்றுமதியாளர்கள் தங்கள் உற்பத்தியை காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் மொத்த ஆடை உற்பத்தியில் 85 சதவீதம் பருத்தியை சார்ந்துள்ளது. மீதமுள்ள 15 சதவீதம் மட்டுமே செயற்கை இழை பயன்பாடு உள்ளது. இந்திய அரசு செயற்கை இழை ஆடை உற்பத்திக்கு பல்வேறு நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் செயற்கை இழை ஆடை உற்பத்தி அதிகரித்து கொலம்பியாவுக்கான ஏற்றுமதி வாய்ப்பை இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் பெருமளவு பயன்படுத்துவர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>