முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கும் குப்பைகள் கடும் வெயிலுக்கு பற்றி எரியும் அவலம்

 

திருவாரூர்: முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கும் குப்பைகள் கடும் வெயிலுக்கு பற்றி எரிந்து எரிந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் குப்பை கிடங்கு இல்லாததால் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கோவிலூர் கிழக்கு கடற்க்கரை சாலையோரம் உள்ள தனியார் இடத்தின் முன்பு பேரூராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது.

இதனால் கோவிலூர் ரவுண்டானா முதல் சாலையோரம் குப்பைகள் நிரம்பி சுகாதரமற்ற நிலையில் கிடக்கிறது இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெயில் தாக்கத்தால் குவிந்து கிடக்கும் குப்பையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது

Related Stories: