×

வங்கி முறைகேடு வழக்கில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,034 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை..!!

புதுடெல்லி: வங்கி முறைகேடு வழக்கில் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,034 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் கடன் பெற்று, சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அனில் அம்பானி ரூ.17,000 கோடி பண மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுவரை அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.19,344 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

Tags : Enforcement Department ,Anil Ambani ,New Delhi ,Enforcement ,
× RELATED அரியானாவில் ரயில் பாதையை தகர்க்க சதி...