தமிழ்நாடு அக்ரிகல்ச்சர், ஹார்டிகல்ச்சுரல் சர்வீசஸ் பணிக்காலியிட தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

கோவை, பிப். 25:  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அக்ரிகல்ச்சர், ஹார்டி கல்ச்சுரல் சர்வீசஸ் பணிகாலியிடத் தேர்வுக்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அக்ரிகல்ச்சர், ஹார்டி கல்ச்சுரல் சர்வீசஸ் பணிகாலியிடத்  தேர்வுகள் வருகிற ஏப்ரல்  17,18,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் மார்ச் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும், தேர்வு எழுதுபவர்களுக்கு கோவை மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் இம்மாத இறுதி வாரத்தில் கோவை தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடத்த ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் பாடகுறிப்புகள், குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள் மற்றும் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள studycirclecbe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள விவரங்களை அனுப்ப வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் நடைபெறவுள்ள இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்’ என தெரிவிக்கபட்டிருந்தது. மேலும், விபரங்கள் தெரிந்துகொள்ள 0422-2642388, 9499055938 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Related Stories:

>