கோவையில் 5 ஆயிரம் லாரிகள் நாளை ஓடாது

கோவை,பிப்.25:  கோவை மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை 5 ஆயிரம் சரக்கு லாரிகள், எல்.சி.வி வேன்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டங்களை கண்டித்து நாளை (26-ம் தேதி) ஒரு நாள் வேைலநிறுத்ததை தென்மாநில லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்தது. இதற்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில், கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் பொதுநல டிரஸ்ட், மாவட்ட பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் சங்கம் உள்பட 9 சங்கங்கள் நாளை நடக்கும் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறது. இதையடுத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இது தொடர்பாக கோவை லாரிகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் முருகேசன் கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையில், டீசல், பெட்ரோல் விலை தினமும் உயர்கிறது. டோல் சாலைகளை சரியாக பராமரிக்காமல் பாஸ்டேக் வசூல் செய்கின்றனர். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் நாளை (26-ம் தேதி) ஈடுபடுகிறோம். இதனால், கோவை மாவட்டத்தில் அன்றைய தினம் 5 ஆயிரம் லாரிகள், எல்.சி.வி வேன்கள் ஓடாது. இதனால், ஒரு கோடி ரூபாய் பாதிப்பு இழப்பு ஏற்படும்.

Related Stories:

>