கலசபாக்கம் ஒன்றியத்தில் தூய்மை பாரத ஊக்குனர்களுக்கு பயிற்சி

கலசபாக்கம், பிப்.25: கலசபாக்கம் ஒன்றியத்தில் தூய்மை பாரத ஊக்குனர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. கலசபாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த தூய்மை பாரத ஊக்குனர்களுக்கு நேற்று ஒரு நாள் பயிற்சி கலசபாக்கம் பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிடிஓ விஜயலட்சுமி தலைமை தாங்கி பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசசுகையில், திறந்தவெளியில் மலம் கழிக்கக்கூடாது என்பதையும், அதனால் ஏற்படும் விளைவிகளையும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். மேலும், சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஊக்குனர்கள் செயல்பட வேண்டும் என்பன போன்ற தூய்மைகள் குறித்து விளக்கு கூறி பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை பிடிஓ விஜயலட்சுமி, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன். உதவியாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் கணினி உதவியாளர் பிரகாஷ் நன்றி கூறினார். சுகாதாரம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிட தூய்மை பாரத கையேடுகள் ஊக்குனர்களுக்கு வழங்கப்பட்டது.

Related Stories:

>