×

வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 பேர் கைது

வேலூர், பிப்.25: வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு ₹3 ஆயிரம், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹5ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் 2016ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நேற்று முதல் காலவரையற்ற குடியேறும் போராட்டத்தை தொடங்கினர். வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று முன்தினம் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு மாற்றுத்திறனாளிகள் அலுவலக வளாகத்தில் தங்கினர். தொடர்ந்து, 2ம் நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலூர் அண்ணா சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தெற்கு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Vallore ,
× RELATED வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்...