தென்காசி கோயில் மாசி மகப்பெருவிழாவையொட்டி வண்ண மலர்களால் மிளிர்ந்த நுழைவுவாயில்

தென்காசி, பிப்.25:  தென்காசி காசி விஸ்வவநாதர்  கோயில் மாசி மகப்பெருவிழாவில் 7ம் நாளான நேற்று தேவர் சமுதாய மண்டகப்படியை முன்னிட்டு நுழைவுவாயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மேலும் சிம்ம வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர்.  தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மகப்பெருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி சார்பில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. 7ம் நாளான நேற்று தேவர் சமுதாய மண்டகப்படியை முன்னிட்டு காலை ஏக சிம்ம வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதியுலா நடந்தது. 10 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, மதியம் அன்னதானம் நடந்தது. மாலை பரதநாட்டியம், சுவாமி நடராஜ பெருமான் எழுந்தருளல், தாண்டவ தீபாராதனை, பூப்பல்லக்கில் சுவாமி, அம்பாள், எழுந்தருளல்,  பஞ்சமூர்த்தி புறப்பாடு, சிறப்பு வாணவேடிக்கை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனர்.   ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் தென்காசி வட்டார தேவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: