சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

சங்கரன்கோவில், பிப். 25: சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தின விழா நடந்தது. எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.  நகரச் செயலாளர் ஆறுமுகம்,  ஒன்றியச் செயலாளர்கள் வேல்முருகன்,  ரமேஷ், செல்வராஜ்,  நெல்லை கூட்டுறவு பேரங்காடி துணைத்தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தனர். இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எம்ஜிஆர் மன்றம் ரவிச்சந்திரன் முன்னாள் யூனியன் சேர்மன்  முருகையா, ஜெ. பேரவை குருவிகுளம் ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன்,  நகரச் செயலாளர் சவுந்தர் என்ற சாகுல் ஹமீது,  ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மாரியப்பன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கர சுப்பிரமணியன்,  முன்னாள் கவுன்சிலர்கள் முத்துக்குட்டி,  நாகரத்தினம், வார்டு செயலாளர்கள் தங்கம்,  மணிகண்டன்,  நிவாஸ்,  ஆப்ரேட்டர் மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>