ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி, பிப்.25: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ரத்த தான முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி டூவிபுரத்திலுள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் செயலாளர் தனராஜ் தலைமையில் நடைபெற்ற ரத்த தான முகாமினையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தலைமையில், தூத்துக்குடி பசுமை பண்ணை அங்காடி முன்பு நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளையும் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., வழங்கினார். இதில், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் ஆறுமுகநேரி கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் ராஜசேகரன், மாநில எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் மீன் வளர்ச்சி கழக தலைவர் அமிர்த

கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட இணைச்செயலாளர் செரீனாபாக்யராஜ்,

துணை செயலாளர் சந்தானம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல்வீரபாகு, துணைச்செயலாளர் வலசைவெயிலுமுத்து, மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர்,

தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அருண்ஜெபக்குமார், பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, மத்திய வடக்கு பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், துணை செயலாளர் டைகர்சிவா, ஒன்றிய செயலாளர்கள் ஜவகர், லெட்சுமணப்பெருமாள், காசிராஜன், அழகேசன், விஜயகுமார், ராஜ்நாராயணன், சிறுபான்மை அணி ஜோசுவாஅன்புபாலன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சகாயராஜா, சோபன் பாலசிங், சாம்கௌதம் மற்றும் சாம்ராஜ், பாலஜெயம் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோன்று, தூத்துக்குடி சிதம்பர நகரில் அதிமுக அமைப்பு செயலாளரும், வேளாண்மை விற்பனைக்குழு தலைவருமான சித.செல்லப்பாண்டியன் தலைமையில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் ஜோதிமணி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முனனாள் பொதுக்குழு உறுப்பினர்  மாரியப்பன், மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளர் ஜோசப், ஞாயம் ரொமால்ட், ஜெ.பேரவை மூர்த்தி, இளைஞரணி ராஜா, பேச்சாளர் முருகானந்தம்,

முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி சேவியர்ராஜ், முன்னாள் நகர அவைத்தலைவர் பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, அய்யனடைப்பு, மடத்தூர், தபால்தந்தி காலனி, 3வது மைல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் செல்லபாண்டியன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதுபோன்று, தூத்துக்குடி கீழூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஞானராஜ் தலைமையில் அதிமுகவினர் காய்கனி மார்க்கெட் பகுதியில் ஜெ.பிறந்தநாள் விழா கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Related Stories:

>