ஆடிட்டர் வீட்டில் பணம் கொள்ளை

நாசரேத்,பிப்.25: நாசரேத் ஸ்டேப்ளி தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (66). கூட்டுறவு வங்கியில் ஆடிட்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் குடும்பத்துடன் ஓசூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.  இந்நிலையில் 23ம் தேதி காலை அவரது பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக சங்கரலிங்கத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர் நாசரேத் போலீசில் தெரிவித்ததன் பேரில் எஸ்.ஐ அனந்தமுத்துராமன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதனிடையே ஓசூரிலிருந்து சங்கரலிங்கம் உடனடியாக ஊருக்கு வருகை வந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது.

 இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>