×

குழந்தைகளுக்கு புரதச்சத்து தேவை உணர்ந்து புதுச்சேரி அங்கன்வாடியில் வாரம் 3 முட்டை வழங்கப்படும் கவர்னர் தமிழிசை அதிரடி

புதுச்சேரி,  பிப். 25: புதுச்சேரி அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு புரதச்சத்து  தேவையை உணர்ந்து வாரம் 3 முட்டை வழங்க கவர்னர் தமிழிசை அதிரடியாக  உத்தரவிட்டுள்ளார்.
 புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்  அரசு கவிழ்ந்த நிலையில், ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் தமிழிசை பரிந்துரை  செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில் விரைவில்  இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மழை வெள்ளத்தில் அடித்துச்  செல்லப்பட்ட சண்முகாபுரம் பெண்ணுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையும், அவரது  குழந்தையின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என கவர்னர் தமிழிசை அறிவித்தார். இந்த நிலையில் கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரி மாநிலத்திலுள்ள 855 அங்கன்வாடி  மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு  வழங்கப்பட்டு வருகிறது.அக்குழந்தைகள் புரதச்சத்தின் தேவையை உணர்ந்து  வாரந்தோறும் ஒரு முட்டை வீதம் வழங்கப்படுவதை உயர்த்தி வாரம் 3 முட்டைகள்  வீதம் வழங்க கவர்னர் தமிழிசை அரசுத் துறைக்கு அறிவுறுத்தினார்.  அதற்கான  செலவினங்களுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால் 29,846 குழந்தைகள்  பயன்பெறுவர். ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.1.68 கோடி கூடுதல் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Governor ,Tamilisai Action ,Puducherry Anganwadi ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...