×

டோல்கேட் கட்டணம் கேட்டதால் தலைமுடியை பிடித்து இழுத்து பெண் ஊழியர் மீது எம்எல்ஏவின் பாதுகாவலர், ஆதரவாளர்கள் தாக்குதல்

*வீடியோ வைரலானதால் எம்எல்ஏ மன்னிப்பு கோரினார்

திருமலை : டோல்கேட் கட்டணம் கேட்டதால் பெண் ஊழியரின் தலைமுடியை பிடித்து இழுத்து எம்எல்ஏவின் பாதுகாவலர் மற்றும் ஆதரவாளர்கள் சரமாரி தாக்கினர். இதுதொடர்பாக எம்எல்ஏ மன்னிப்பு கேட்டார்.ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், கல்யாணதுர்கம் தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ சுரேந்திரபாபு.

இவர் நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பினார். மதனப்பள்ளி-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வால்மீகிபுரம் அடுத்த கண்டபோய்னப்பள்ளி டோல்கேட்டில் வந்தபோது, அங்கிருந்த ஊழியர்கள், காருக்கு சுங்ககட்டணம் கேட்டனர்.

இதற்கு, யார் வாகனம் என தெரியாமல் பணம் கேட்கிறயா? எம்எல்ஏ கட்டணம் செலுத்துவாரா? என எம்எல்ஏவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும், அவரது ஆதரவாளர்களும் ஆத்திரமடைந்தனர். பின்னர் பாதுகாவலர், காரிலிருந்து இறங்கி டோல்கேட் தடுப்பை உடைத்து, டோல்கேட் மேலாளர் ரவி, பெண் ஊழியர் ஸ்ரீலதா ஆகியோரை சரமாரி தாக்கியுள்ளனர். மேலும், பெண் ஊழியரின் தலைமுடியை பிடித்து தாக்கியுள்ளனர்.

எம்எல்ஏவின் வாகனத்திலேயே தாக்கப்பட்ட டோல்கேட் ஊழியர்களை ஏற்றிகொண்டு வால்மீகிபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துசென்று இன்ஸ்பெக்டர் ராகவ்ரெட்டியிடம் புகார் அளித்தனர். பின்னர் டோல்கேட் ஊழியர்களும் நடந்த அனைத்தையும் கேமரா காட்சி ஆதாரங்களுடன் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கிருந்த எம்எல்ஏ மற்றும் பாதுகாவலர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர், நடந்த தவறுகளுக்கு, சுங்கச்சாவடி ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags : MLA ,Tolgate ,AP State ,Ananthapuram District ,Kalyanathurgam ,Constituency ,
× RELATED இந்திய புகைப்பட கலைஞர் ரகுராய் மரணம்:...