பாதை ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி மனு

சிவகங்கை, பிப்.25: மானாமதுரை அருகே பணிக்கனேந்தல் நான்கு கண்மாய்களுக்கான நீர்வரத்து ஆக்கிரமிப்பை அகற்றி கொடுக்கப்பட்ட சட்ட விரோத பட்டாக்களை ரத்து செய்ய கிராம விவசாயிகள், இளைஞர்கள் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் வீரபாண்டி தலைமையில் மனு அளித்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பணிக்கனேந்தல் கிராமம் வைகை ஆற்றின் கரையில் உள்ளது. இக்கிராமத்திற்கு நான்கு கண்மாய்கள் உள்ளது. நான்கு கண்மாய்களுக்கு நீர்வரத்து பகுதியாக இருக்கக் கூடிய வேதியரேந்தல் சாலைக்கு மேற்கு பக்கமாக நீர்ப்பிடிப்பு உள்ளது. இந்த நீர்வள ஆதாரத்தை பாதிக்கிற வகையில் ஏராளமான பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.

 தனிநபர் ஒருவர் 20ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறார். சிலர் சட்டவிரோதமாக அரசு நிலத்தை பட்டா பெற்றுள்ளனர். இதனால் கண்மாய்க்கான நீர்வரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, பட்டா அளித்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>