அட்டப்பாடியில் விளைநிலங்களுக்குள் புகுந்த 18 காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொன்றனர்

பாலக்காடு : கேரள மாநிலம் அட்டப்பாடி அகழி கிராமப்பஞ்சாயத்திற்கு உட்பட்ட தாவளம், முள்ளி, அகழி, முக்காலி ஆகிய இடங்களிலாக விவசாயினர் கம்பு, சோளம், ராகிக மற்றும் ஊடுப்பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர்.

இவ்விடங்களில் கடந்த சில மாதங்களாகவே காட்டுப்பன்றிகள் முகாமிட்டு தேட்டப்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயினர் பாதிக்கப்பட்டு வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அகழி கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் காட்டுப்பன்றிகள் சேதம் விளைவித்த விளை நிலங்களை பார்வையிட்டனர்.

இதன்பின் அட்டகாசம் செய்யும் பன்றிகளை சுட்டுக் கொல்ல முடிவெடுத்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வனத்துறை காவலர்கள் மற்றும் 12 சூட்டர்கள் ஒருங்கிணைந்து 18 காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொன்றனர். அகழி, சோளையூர் ஆகிய இரண்டு கிராமப்பஞ்சாயத்துகளில் கடந்த ஒரு மாதத்தில் 60க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், கிராம மக்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories: