விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்: பொதுமக்களை இன்று சந்திக்கிறார் ஆ.ராசா: வட்ட பொறுப்பாளர் டி.ஜே.கோவிந்தராசன் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று (25ம் தேதி) காலை 9 மணி முதல் கும்மிடிப்பூண்டி பஜார், ஈகுவார்பாளையம், பாதிரிவேடு, மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, கரடி புத்தூர், ஊத்துகோட்டை, பனப்பாக்கம் ஆகிய இடங்களில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்கிற தலைப்பில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பொதுமக்களின் குறைகளை கேட்கிறார். நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் கும்மிடிப்பூண்டி கி.வேணு, க.சுந்தரம், இஏபி.சிவாஜி, சி.எச்.சேகர், பி.ஜெ.மூர்த்தி, தமிழன் இளங்கோவன், மு.பகலவன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கேவிஜி.உமாமகேஸ்வரி மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>