கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு பெருந்தலைவர் எஸ்.சுஜாதா சுதாகர் தலைமை தாங்கினார். துணை பெருந்தலைவர் ஆர்.சரஸ்வதி ரமேஷ், ஒன்றிய ஆணையர் எம்.ராம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரெட்ரிக் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் எஸ்.ராணி, வி.எம்.சுரேஷ், கோ.ஹரிதரன், டி.யாமினி, பி.பூங்கோதை, மூ.நரேஷ்குமார், கே.திராவிட பக்தன், பா.யோகநாதன், நா.வெங்கடேசன், பா.தரணி, வி.கோவிந்தம்மாள், எஸ்.பிரசாந்த், சி.தயாளன், பா.சுபபிரியா, பா.சுமதி, ஆர்.கார்த்திகேயன், மு.நீலாவதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>