சென்னை: மே 1 முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும். மாநிலத்தின் பிற பகுதிகளில் மழை திரும்பும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “மே 1/2 முதல் உள்நாட்டு, தென் மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் மழை மீண்டும் தொடங்கினாலும், ஆந்திர எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகள் (KTCC – சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள்) கடும் வெயிலில் சுட்டெரியும்.
சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை எளிதாக 40°C-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலூரில் ஏப்ரல் 7, 2026 அன்று பதிவான 42°C மீண்டும் எட்டப்படும் வாய்ப்பு உள்ளது.
எளிய வார்த்தைகளில் சொன்னால், ஆந்திராவுக்கு அருகிலுள்ள பகுதிகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும். கடலோரத்தின் மிகவும் அருகிலுள்ள பகுதிகள் மட்டும் சற்றே தப்பிக்கலாம்.
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் வட தமிழ்நாடு மக்கள் கவனிக்கவும்: மே 1/2 முதல் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி வெயிலில் செல்லாமல் இருக்கவும். எப்போதும் குடை மற்றும் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்” என தெரிவித்துள்ளார்.
