பிரதமர் பாதுகாப்புக்காக துணை ராணுவம் புதுவை வருகை

புதுச்சேரி, பிப். 24: பிரதமர் நரேந்திரமோடி நாளை புதுச்சேரி வருகிறார். அவர் இங்கு அரசு நிகழ்ச்சி ஒன்றிலும், பாஜக பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்கிறார். அவரது வருகையையொட்டி புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க துணை ராணுவ படையினர் புதுச்சேரி வந்துள்ளனர். ஒரு கம்பெனிக்கு 100 பேர் என 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் நேற்று காலை புதுச்சேரி வந்தனர். அவர்கள் கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டு, ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>