ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே நளராஜபுரத்தைச் சேர்ந்த காட்டேரி பெருமாள் மகன் முத்துப்பாண்டி (21). கோவையில் பலசரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் இசக்கிராஜா (20). காளிமுத்து மகன் சிவகாரனேஷ் (19). சென்னையில் வேலை பார்த்து வருகிறார். நண்பர்களான மூவரும் கடந்த 23ம்தேதி ஓட்டுப் போடுவதற்காக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு சென்றனர். அங்கு வாக்களித்து விட்டு ஓய்வெடுத்தனர். நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் ஒரே பைக்கில் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை முத்துப்பாண்டி ஓட்டினார். ஆழ்வார்திருநகரி வெள்ளமடம் அருகே அரசாங்க நகர் பகுதியில் வந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையோர மைல்கல் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். இதில், முத்துப்பாண்டியும், இசக்கிராஜாவும் இறந்தனர். நெல்லை அரசு மருத்துவமனையில் சிவகாரனேஷூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மைல் கல்லில் பைக் மோதி 2 பேர் பலி: சென்னை வாலிபர் படுகாயம்
- சென்னை
- ஸ்ரீவைகுண்டம்
- முத்துப்பாண்டி
- கட்டேரி பெருமாள்
- நலராஜபுரம்
- தூத்துக்குடி மாவட்டம்
- கோயம்புத்தூர்
- இசக்கராஜா
- சின்னதுரை
- சிவகரனேஷ்
- கலிமுத்து
- சென்னை…
