புதுச்சேரியில் புதிதாக 28 பேருக்கு தொற்று

புதுச்சேரி, பிப். 24: புதுச்சேரியில் புதிதாக 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 1632 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 10, காரைக்கால் - 5, மாகே - 12, ஏனாம்-1 என மொத்தம் 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்மாபுரியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவரும், கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த 42 வயது நபர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 665 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 1.67 ஆக நீடிக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 39,628 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 45 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 48 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>