சாலையோரம் நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து சாவு

உளுந்தூர்பேட்டை, பிப். 24:  கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வீரமுடையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேல் மகன் பழனிவேல் (30). இவர் நேற்று உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் பெரியாயி அம்மன் கோயில் அருகில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்தவரை அந்த வழியாக சென்ற இரண்டு பேர் மீட்டு இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பழனிவேல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எடைக்கல் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

>