அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

காஞ்சிபுரம்: அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 2வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சித்ரா முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சங்க மாநில செயற்குழு உறுப்பினர் விமலா கோரிக்கையை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

அரசு வழங்கும் ஊதியம் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை. குழந்தைகளின் நலன் கருதி அரசு கொடுக்கும் அத்தனை பணிகளையும் சிறப்பாக செய்கிறோம். இயற்கை பேரிடர் காலங்களில் கஜா புயல் முதல் உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா காலம் வரை மக்களின் துயர் துடைக்கும் அத்தனை பணிகளிலும் உயிரை துச்சமென மதித்து பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான அரசு ஊழியராக்க வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடந்தது. சிஐடியு நிர்வாகிகள் வசந்தா, பகத்சிங்தாஸ், சௌந்தரி, லட்சுமிபதி, வாசுதேவன், சங்க நிர்வாகிகள் ஜீவகீதம், நேசமணி, சுகன், கௌரி, நான்சி, விசாலாட்சி, அஞ்சலாட்சி உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>