காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் கோயில் மைதானத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கிரேட் இந்தியன் சர்க்கஸ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் கோயில் மைதானத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கிரேட் இந்தியன் சர்க்கஸ் நடக்கிறது. காஞ்சிபுரம் மேட்டுத்தெரு பஸ் நிறுத்தம் அருகே கருக்கினில் அமர்ந்தவள் கோயில் மைதானத்தில் கடந்த 19ம் தேதி முதல் கிரேட் இந்தியன் சர்க்கஸ் நடக்கிறது. இதில், அரேபிய நாட்டு ஒட்டகங்கள், குதிரைகள், பொமேரியன் நாய்கள் ஆகியவற்றின் சாகசங்கள் நிறைந்துள்ளன. ஆஸ்திரேலியா நாட்டு பயிற்சியாளர்களிடம். பயிற்சி பெற்ற சர்க்கஸ் கலைஞர்கள் அழகிய ரிங் டான்ஸ் மற்றும் மகாராஷ்டிரா நாட்டு அழகிகளின் சைக்கிள் சாகசங்கள், மயிர்க்கூச்செறியும் ரிங் ஆப் டெத் பார் விளையாட்டு, பேரேட் ஜிக்லெங், மணிப்பூர் மாநில கலைஞர்களின் அதிபயங்கர சாகச நிகழ்ச்சிகள் நிகழ்த்துகின்றனர்.

இதுவரை காஞ்சி நகர மக்கள் கண்டிராத குதிரை சாகசம், மேற்கு வங்க மாநில அழகிகளின் ஸ்டேட்சுயு நிகழ்ச்சிகள், ஆப்பிரிக்க கலைஞர்களிடம் பயிற்சி பெற்ற பயர் டான்ஸ்,  நேபாள் அழகிகள் உயரத்தில் கம்பி மேல் செய்து காட்டும் கப்சாசர் நிகழ்ச்சி, கோமாளிகளின் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகள் என 128 கலைஞர்களின் இரண்டரை மணிநேர அற்புத நிகழ்ச்சிகள் சீன நாட்டு கலைஞனின் அற்புத நிகழ்ச்சிகள் என சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என சர்க்கஸ் மேலாளர் ஜெயன் மற்றும் நாசர் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories: