×

தோட்டத்திற்குள் புகுந்த பாம்பை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்கள்: வீடியோ வைரல்

 

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், சிறுமுகை அடுத்துள்ள காந்தவயல் பகுதியில் லிங்காபுரத்தை சேர்ந்த சின்னசாமி (62) விவசாயி. இவர் தனது தோட்டத்தில் வாழை, தென்னை, பாக்கு சாகுபடி செய்துள்ளார். தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்யும் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கும் வகையில் 5 நாய்களை வளர்த்து வருகிறார். நேற்று காலை இவரது வாழை தோப்பிற்குள் சுமார் 6 அடி நீள பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அப்போது சின்னச்சாமி விவசாய வேலை செய்து கொண்டிருந்தார்.

திடீரென தோட்டத்திற்குள் புகுந்த பாம்பை கண்ட வளர்ப்பு நாய்கள் விடாமல் துரத்தி,துரத்தி கடிக்கத் துவங்கின. நாய்களின் பிடியில் சிக்காமல் நழுவிய பாம்பு ஒரு கட்டத்தில் அவற்றிடமிருந்து தப்ப முடியவில்லை. இறுதியில் நாய்கள் அனைத்தும் சேர்ந்து பாம்பை கடித்தே கொன்றன.
இதனை அங்கிருந்த விவசாய தொழிலாளி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : METUPPALAYAM ,CHINNASAMI ,LINGAPURAM ,SHIRUMUGAI, KOWAI DISTRICT ,
× RELATED இன்றைய காலத்தின் அவசியம் சத்குரு:...