2 ஆயிரம் ஆண்டு பழமையான இலவபுரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

புழல்: புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் முதல்நிலை ஊராட்சியில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ இலவபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் காலை தமிழ் முறைப்படி, மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் புழல், செங்குன்றம், சோழவரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேக விழாவின் முடிவில் பெருந்திரளாக வந்திருந்த பக்தர்கள் அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன், வழக்கறிஞர் சரவணன் மற்றும் ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories:

>