கம்பெனியில் இரும்பு பைப்புகள் திருடிய மூவர் கைது

ஆவடி: திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் நகர் கோல்டன் தெருவில் தனியார் நிறுவனத்தின் பண்டகச்சாலையில் 500க்கும் மேற்பட்ட இரும்பு பைப்புகளை சேமித்து வைத்துள்ளனர். கடந்த 10ம் தேதி பண்டகச்சாலை அலுவலர் சிவசங்கர்(28) வேலை முடிந்து பூட்டி விட்டு சென்றார். நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து வளாகத்தில் இருந்த 40 பைப்புகளை திருடி சென்றனர். புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து குன்றத்தூர் பூந்தண்டலம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த ரங்கேஸ்(32), திருமுல்லைவாயல் எம்ஜிஆர் நகர் 7வது தெரு சேர்ந்த கவுதம்குமார்(23), திருமுல்லைவாயல் தெற்கு மாட வீதியை சேர்ந்த யுவராஜ்(23) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories:

>