கொடைக்கானல் சென்றார் முதல்வர்; தேர்தலில் திமுகவுக்கு வெற்றி உறுதி என தம்ஸ் அப் காட்டினார்: மதுரை விமான நிலையத்தில் உற்சாகம்

மதுரை: சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு சூப்பராக இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டை விரலை உயர்த்தி ‘தம்ஸ் அப்’ காட்டினார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதமாக திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு இன்று காலை குடும்பத்துடன் சென்றார்.

இதற்காக முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11.30 மணியளவில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். பின்னர் முதல்வர் காரில் ஏறுவதற்காக நடந்து சென்றபோது, சுற்றி வந்த நிருபர்கள் சட்டமன்ற தேர்தல் திமுகவின் வெற்றி குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவின் வெற்றி வாய்ப்பு சூப்பர் என்பதை குறிக்கும் வகையில் கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டி உற்சாகமாக சென்றார். பின்னர் காரில் ஏறி கொடைக்கானலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

Related Stories: