எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டையில் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வை கண்டித்து 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் பொக்லைன் இயந்திர உதிரி பாகங்கள் விலை ஏற்றத்தை கண்டித்து ஊத்துக்கோட்டை பகுதியில் 2 நாட்கள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தமிழ்நாடு மாநில தலைவர் விவேக் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் பரந்தாமன், கார்த்திகேயன், பொருளாளர் ராஜசேகர், நிர்வாகிகள் ரவிராஜன், எம்.எஸ்.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் பொக்லைன் இயந்திரங்களின் உதிரி பாகங்களின் விலை உயர்வை கண்டிப்பது மற்றும் நாளை முதல் பொக்லைன் இயந்திரத்தின் வாடகை 1 மணி நேரத்திற்கு ரூ.1000 ஆக உயர்த்துவது என தீர்மானித்து கோஷங்கள் எழுப்பினர். இறுதியில், மணலி பாண்டியன் நன்றி கூறினார்.

Related Stories:

>