காட்டன் சூதாட்டம்; 10 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் டவுன் எஸ்ஐ பாஸ்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பெரியகுப்பம் கற்குழாய் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் கூட்டமாக இருந்தவர்கள் ஓடினர். அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திண்டிவனம் சுசிபிரியன்(27), பழனிமுருகன்(27), சேலம் மாணிக்கம்(24), ஈரோடு உமர்பாருக்(34), பிரதீப்(35), கார்த்திகேயன்(33), வியாசர்பாடி வசந்தகுமார்(25), அரக்கோணம் சாகுல்அமீது(42), திருவள்ளூர் தினேஷ்(35), ஸ்ரீதர்(50) ஆகிய 10 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார், ₹81 ஆயிரம் பணம் மற்றும் 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>