×

சரக்கு ஆட்டோ மோதி மூதாட்டி பலி

கும்பகோணம், ஏப்.25: திருவிடைமருதூர் அருகே லோடு ஏற்றி சென்ற டாட்டா ஏஸ் வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தார். திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட, நமச்சிவாயபுரம் இருளர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி கொளஞ்சியம்மாள் (60). இவர் கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கோவிந்தபுரம்-மயிலாடுதுறை மெயின் ரோட்டில், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற டாட்டா ஏஸ் வாகனத்தில் மோதியது. அப்போது டாடா ஏஸ் வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையின் இடது புறத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி கொளஞ்சியம்மாள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இந்த விபத்து குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Kumbakonam ,Tata ,Thiruvidaimarudur ,Krishnamoorthy ,Kolanjiammal ,Namachivayapuram Irular Nagar ,Aduthurai Panchayat ,Govindapuram ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்