×

கறம்பக்குடியில் தீ தொண்டு நாள்விழா

கறம்பக்குடி, ஏப்.25: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பாக கறம்பக்குடியில் தீ தொண்டு நாள் விழா ஒருவாரம் நடைபெற்றது. தீ தொண்டு விழாவில் கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீ விபத்தில் இருந்து பொது மக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகளை பற்றி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பின்னர் கறம்பக்குடி முக்கிய வீதிகளான சீனிக்கடை முக்கம், உள்கடை வீதி, டோல்கெட் வீதி, கடை வீதிகளில் பேருந்து நிலையம் உள்ளிட்ட கடைகளில் தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்பு பணியாளர்கள் வழங்கினர்.

 

Tags : Fire Service Day ,Karambakudi ,Karambakudi, Pudukkottai district ,Tamil Nadu Fire and Rescue Services Station ,Karambakudi Fire Station Officer ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்