பொன்னமராவதி,ஏப்.25: பொன்னமராவதியில் இறந்த முதியவரின் உடலை மருத்துவக்கல்லூரி மாணவர்களின் மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்காக தானமாக வழங்கப்பட்டது. பொன்னமராவதி புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரம் செட்டியார்(92). இவர் வயது மூப்பின் காராணமாக இறந்துள்ளார்.
இதனையடுத்து பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்க நிர்வாகி பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் இறந்த சுந்தரத்தின் குடும்பத்தாரிடம் பேசி புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்காக உடலை தானமாக வழங்கினர். இதனையடுத்து அவர்களது குடும்பத்தாரிடம் உடல்உறுப்பு தானம் வழங்கியதற்கான சான்று வழங்கப்பட்டது. உடல் தானமாக வழங்கிய சுந்தரம் குடும்பத்தினருக்கு ராயல் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
