வரி விளம்பரங்கள் திருச்சி உறையூரில் பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு

திருச்சி, பிப்.24: திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். திருச்சி உறையூர் தியாகராஜநகரை சேர்ந்தவர் ஞானசம்பந்தம். இவரது மனைவி உஷாராணி (55). இவர் நேற்றுமுன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு 7 மணியளவில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 பேர் உஷாராணி கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>