கருப்பு உடைஅணிந்து சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், சாலைமறியல்

திருச்சி, பிப்.24: குறைந்தபட்ச ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒட்டு மொத்த தொகையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நிர்வாகிகள் எடுத்த முடிவின்படி நேற்று கருப்பு உடை அணிந்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று கருப்பு உடை

அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சத்தியவாணி தலைமை வகித்தார். மாநில செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட முயன்றபோது, போலீசார், பேரிகார்டு அமைத்து தடுத் தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு அரண்களை தாண்டி சத்துணவு ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 380 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர். பின்னர் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories:

>