அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

திருச்சி, பிப்.24: அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர்  நேற்றுமுன்தினம் (22ம்தேதி) திருச்சி பழைய கலெக்டர் அலுவலக சாலையில் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். 2வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>