வரிவசூல் மோசடி ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

துறையூர், பிப்.24: துறையூர் அருகே உள்ள செல்லிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (45). இவர் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து, தற்சமயம் பொண்ணுசங்கம்பட்டி ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வரதராஜபுரம் ஊராட்சியில் 2018, 2019, 2020 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான நிதி தணிக்கை செய்யப்பட்டது. இதில் 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பொதுமக்களிடமிருந்து வசூலித்த சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவைகளை அரசு கணக்கில் செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பான விரிவான விசாரணை நடைபெற்று வந்ததை அடுத்து ஊராட்சி நிதி மோசடி புகார் தொடர்பாக ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நேற்று பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார்.

Related Stories:

>