விராலிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

விராலிமலை, பிப்.24: விராலிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (25ம் தேதி) நடைபெற உள்ளது. விராலிமலை முருகன் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி வழங்கியதாக ஸ்தலவரலாறு கூறுகிறது. இக்கோயிலில் வைகாசிவிசாகம், தைபூசம், கார்திகைதீபம், கந்த சஷ்டி விழா போன்ற விழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இவ்விழாக்களில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெரும் திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்வார்கள. இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய திருப்பணிகுழுவினர், கோயில் நிர்வாகம், உபயதார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முடிவெடுதத்து கடந்த 2018 ஆண்டுகோயில் பாலாலயம் நடத்தப்பட்டது.

தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் கோயில் கும்பாபிஷேகம் நடத்த உபயத்தார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 13 தேதி நடந்தது. கூட்டத்தில் முடிவெடுத்தபடி கும்பாபிஷேகம் நாளை (25ம் தேதி) நடைபெறுகிறது.

இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் கடந்த 21ம் தேதி விக்ணேஷ்வர பூஜையுடன் துவங்கியது. 22ம் தேதி தெப்பகுளத்தில் இருந்து தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், கும்பஅலங்காரம் செய்து யாகபிரவேஷத்துடன் முதற்கால பூஜைகள் துவங்கியது. 2ம் மற்றும் 3ம் கால பூஜையாக நேற்று நடைபெற்றது. இதில் முருகனுக்கு அஷ்ட பந்தனமருந்து சாத்துதல் நிகழச்சி நடைபெற்றது. இரவு பூர்ணஹுதி தீபாராதனை நடைபெற்றது. நான்காம் காலபூஜையாக இன்று (24ம் தேதி) கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், ஆச்சார்யவிஷேச சாந்தி, பாபனாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. 6ம் காலபூஜை நாளை (25ம் தேதி) அதிகாலை நாடிசந்தனம், ஸ்சபர்சாஹுதி மற்றும் பூர்ணாஹீதி நடத்தப்பட்டுகடம் புறப்பட்டு நாளை காலை 8.30 மணிக்கு விமான ராஜகோபுரகலச மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து மூலவருக்கு மஹாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்துமஹாதீபஆராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்படுகிறது. விழாவையொட்டிஅன்னதானம் வழங்கப்படுகிறது. அதைதொடர்ந்துமாலைசுவாமிக்குமஹாஅபிஷேகம்நடத்தப்பட்டு இரவுசுவாமிதிருவீதிஉலாநடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், ஊர் முக்கியஸ்தர்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தாகள் செய்துள்ளனர்.

Related Stories: