வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி

பெரம்பலூர்,பிப்.24: வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் போட்டி தேர்வுகளில் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் படிக்கும் காலங்களிலிலிருந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் நடத்த அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. போட்டி தேர்வுகள் தொடர்பான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்கள் பய ன்பெறும் வகையில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, வங்கி தேர்வுகள் டெட், நீட் தேர்வுக்கான புத்தகங்களும் போட்டித் தேர்வுகளின் மாதிரி வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

Related Stories:

>