தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை: 2 பேர் கைது

ஜெயங்கொண்டம், பிப்.24: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் போலீசார் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உடையார்பாளையம் வெள்ளபிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த குறளரசன்(24), அதே பகுதியை சேர்ந்த சந்துரு(55) ஆகியோர் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து கடைக்காரர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் விற்பனை செய்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>